செய்திகள்,விளையாட்டு இந்திய அணி வெற்றி: தொடரும் சரித்திர பயணம்…

இந்திய அணி வெற்றி: தொடரும் சரித்திர பயணம்…

இந்திய அணி வெற்றி: தொடரும் சரித்திர பயணம்… post thumbnail image
அடிலெய்டு :- உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி ஒரு போதும் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை. 1992-ம் ஆண்டு 43 ரன் வித்தியாசம், 96-ம் ஆண்டு 39 ரன் வித்தியாசம், 1999-ல் 47 ரன் வித்தியாசம், 2003-ல் 6 விக்கெட் வித்தியாசம், 2011-ல் 29 ரன் வித்தியாசம் என்று உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான முந்தைய 5 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.

அந்த பெருமையை தற்போதைய உலக கோப்பையிலும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதே சமயம் இம்ரான்கான்(1992-ம் ஆண்டு), ஆமீர் சோகைல் (1996), வாசிம் அக்ரம் (1999), வக்கார் யூனிஸ் (2003), அப்ரிடி (2011) ஆகியோருடன் இப்போது மிஸ்பா உல்ஹக்கும் (2015) இந்தியாவுக்கு எதிராக சரண் அடைந்த பாகிஸ்தான் கேப்டன்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி