இந்த பெருமிதத்துக்குரிய செய்திக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக ஹாங் காங் நாட்டில் வாழும் இந்தியரான சி.பி.யோகராஜ் (வயது 29) என்பவர் தொடர்ந்து 40 மணி நேரம் யோகாசனம் செய்து புதியதோர் உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார். சிதம்பரம் என்பவரின் மகனான இவர் தனது ஆரம்ப கல்வியை நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. ஆண்கள் பள்ளியில் பயின்றார்.
யோகாசனக் கலை பயிற்றுனரான இவர் ஹாங் காங்கில் உள்ள தனது யோகா அரங்கத்தில் 1500-க்கும் மேற்பட்ட ஆசனங்களை செய்து இந்த அரிய சாதனையை நிகழ்த்தியதன் மூலம் இன்று ‘கின்னஸ்’ சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
5 வயதில் யோகா கலையை கற்றுக்கொண்ட யோகராஜ், 12 வயதில் யோகா பயிற்றுனராக மாறினார். கடந்த 2003-ம் ஆண்டு ஹாங் காங் நாட்டுக்கு வந்தார். 2 மணி நேரம் 40 நிமிடங்கள் தலைகீழாக நின்றது, ஓடும் மோட்டார் சைக்கிளில் அமர்ந்தபடி 23 ஆசனங்கள் செய்தது உள்பட பல்வேறு சாதனையை இதற்கு முன்னர் இவர் நிகழ்த்தியுள்ளார்.
இன்றைய இந்த புதிய சாதனையை ஏற்படுத்தும் முன்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த யோகராஜ், இந்த 40 மணி நேர சாதனையை நான் நிகழ்த்திவிட்டால், ஜுன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க காரணமாக இருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த வெற்றியை சமர்ப்பித்துக் கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய உலக சாதனையை இன்று நிறைவு செய்ததையடுத்து அவரை ஹாங் காங்கில் உள்ள இந்திய தலைமை தூதர் பாராட்டியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி