அப்போது பூலோகத்தில் நாயகி தருஷியின் பெற்றோர்கள் விபத்தில் இறந்துவிடுகிறார்கள். இதனால் நாயகியின் உறவினர்கள் இவரது சொத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார்கள். நாயகியின் தாய்மாமன் மிகப்பெரிய ரவுடி. இவர் நாயகியை திருமணம் செய்துகொண்டு சொத்துக்களை அடைய முயற்சி செய்கிறார்.
இந்த சூழ்நிலையில் நாயகன் கடவுளான நாசருக்கு தெரியாமல் பூலோகத்துக்கு வந்து நாயகியை மகிழ்விக்க முயற்சி செய்கிறார் அக்னி. இந்த விஷயம் கடவுளான நாசருக்கு தெரியவர, இவரை மனிதப் பிறவியாகவே பூமியில் நடமாட சாபம் கொடுக்கிறார்.
என்னசெய்வதென்று தெரியாத நாயகன் கடவுளிடம் சென்று தனது தவறுக்கு மன்னிப்பு கேட்க, கடவுளோ நாயகியை மனித பிறவியாக இருந்து சந்தோஷப்படுத்து என்று சொல்லி அனுப்புகிறார்.
ஆனால், தூதுவனான அக்னிக்கு மனிதர்களுக்குண்டான இயல்பான வாழ்க்கையும், அவர்களுடைய பழக்க வழக்கங்களும் தெரியாமல் விழிக்கிறார். இருப்பினும், நாயகியுடனே இருந்து அவளை சந்தோஷப்படுத்துகிறான்.
ஒருகட்டத்தில் நாயகி, நாயகனை விரும்ப ஆரம்பிக்கிறார். நாயகனும் அவள்மீது காதல் கொள்கிறான். இவர்களது காதல் நாயகியின் மாமாவுக்கு தெரிகிறது. அவர் நாயகனை அடித்து கொன்று விடுகிறார்.
பின்பு, கடவுளான நாசர் இவருக்கு உயிர் கொடுத்தாரா..? நாயகனும், நாயகியும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா..? என்பதே மீதிக்கதை.
நாயகன் அக்னி ஒரு கற்பனை கதையை உருவாக்கி அதை நகைச்சவையாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார். காட்சிகள் சிரிப்பூட்டும் அளவுக்கு இல்லை. கன்னி முயற்சி என்பதால் அவரது முயற்சிக்கு பாராட்டுக்கள். இயக்குனராகவும், நடிகராகவும் தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.
தொழிலதிபரின் மகளாக வரும் நாயகி தருஷி, உடையிலும், நடிப்பிலும் பளிச்சிடுகிறார். திரையில் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறார். கடவுளாக வரும் நாசரின் அனுபவ நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம். தேவதைகளுக்கு மாஸ்டராக வரும் மனோபாலாவுக்கென்று படத்தில் தனி காமெடி டிராக் வருகிறது. அது பெரிதாக எடுபடவில்லை.
ஷமீர் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பாரதிராஜன் ஒளிப்பதிவும் சுமார் ரகம்தான்.
ஆக மொத்தத்தில் ‘மனித காதல் அல்ல’ ஓரளவு ரசிக்கலாம்…
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி