சியோல்:-பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையில் உள்ள வடகொரியா, தொடர்ந்து ஆயுதக்குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி அணுகுண்டு சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் அந்த நாடு நடத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது அந்த நாடு கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தி உள்ளதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பான படங்களும் வெளியாகி உள்ளன.
ஒரு சிறிய கடற்படை கப்பலில் இருந்து, கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஏவப்பட்ட காட்சியை, வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் பார்வையிட்டதைக் காட்டும் படமும் வெளியாகி உள்ளது. இந்த ஏவுகணை, ரஷியாவின் கேஎச்-35 கப்பல் எதிர்ப்பு ஏவுகணையைப்போன்றே இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இதன்மூலம் வடகொரியாவின் கடற்படை பலம் கூடி உள்ளது. வடகொரியா சமீப காலமாக வான், கடற்படை பயிற்சிகளை தீவிரப்படுத்தி வருகிற நிலையில், இப்போது கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தி இருப்பது, உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி