சென்னை:-வெள்ளைக்கார பெண்ணாக இருந்தாலும் நடித்த சில படங்களிலேயே நம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை எமி ஜாக்ஸன். இவர் சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா நடிக்கும் ‘மாஸ்’ திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
ஆனால், திடிரென்று அவர் அந்த படத்தில் இருந்து விலக, ப்ரணீதா அவருக்கு பதிலாக ஒப்பந்தம் ஆனார். இது குறித்து நீண்ட நாட்கள் கழித்து மனம் திறந்துள்ளார் எமி. இதில் இவர் கூறுகையில், முதலில் இப்படத்தில் எனக்கு நிறைய ஸ்கோப் இருக்கும் என்று தான் நடிக்க சம்மதித்தேன், சில நாட்கள் கழித்து தான் தெரிந்தது என்னுடைய பகுதி மிக குறைவு என்று, அதனால் தான் விலகினேன் என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி