லண்டன்:-பால்செஸன் என்ற ஓவியர் வரைந்த ஓவியம் ஒன்று ரூ.1500 கோடிக்கு விற்கப்பட்டிருந்தது. இதுதான் உலகத்திலேயே அதிக விலைக்கு விற்ற ஓவியமாக இதுவரை இருந்து வந்தது. ஆனால் இப்போது ஒரு ஓவியம் ரூ. 1800 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தை பிரான்சு நாட்டை சேர்ந்த கோகென் என்பவர் 1892–ம் ஆண்டு வரைந்தார்.
தகிதி தீவை சேர்ந்த 2 பழங்குடி பெண்கள் உட்கார்ந்திருப்பது போல இந்த ஓவியம் வரையப்பட்டிருந்தது. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒருவர் இந்த ஓவியத்தை வைத்திருந்தார். அவர் ஏலம் மூலம் இந்த ஓவியத்தை விற்றார். கத்தார் நாட்டை சேர்ந்த அருங்காட்சியகம் ஒன்று 1800 கோடி ரூபாய் கொடுத்து இந்த ஓவியத்தை வாங்கி உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி