தமிழ்நாட்டில் ரூ.12.80 கோடியும், கேரளாவில் ரூ.3.75 கோடியும், கர்நாடகாவில் ரூ.2.54 கோடியும், பிற மாநிலங்களில் ரூ.1.36 கோடியும், வெளிநாடுகளில் ரூ.9.75 கோடியும் என மொத்தம் 30.20 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசூல் சாதனை படைத்த புதுப்படங்களில் என்னை அறிந்தால் 2வது இடத்தை பிடித்ததாக கூறப்படுகிறது. ரஜினி நடிப்பில் வெளியான ‘லிங்கா’ படத்தின் முதல்நாள் வசூல் ரூ.37 கோடி என கணக்கிடப்பட்டிருக்கிறது. லிங்கா முதலிடத்திலும் என்னை அறிந்தால் இரண்டாவது இடத்திலும் இடம் பெற்றிருக்கிறது. விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஐ’ ரூ.27 கோடி வசூல் செய்து மூன்றாவது இடத்திலும், விஜய்யின் ‘கத்தி’ ரூ.23 கோடி வசூல் செய்து நான்காவது இடத்திலும் உள்ளது.
இதேபோல் என்னை அறிந்தால் படம் பாக்ஸ் ஆபீசில் புதிய சாதனை படைக்க உள்ளது. இதுவரை தமிழில் வெளிவந்த எந்த படத்திற்கும் இல்லாத வரவேற்பு இந்த படத்திற்கு கிடைத்து வருகிறது. அதேபோல், முதல் நாள் வசூலிலும் இப்படம் சாதனை படைத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அமெரிக்காவில் இப்படம் முதல் நாள் பாக்ஸ் ஆபீசில் புதிய சாதனையை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. அங்கு 98 திரையரங்குகளில் வெளியான இப்படம் அங்கு முதல்நாள் மட்டும் 1,13,232 டாலர்கள் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசூல் 75 திரையரங்குகளில் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் துபாய், மலேசியா ஆகிய நாடுகளிலும் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அஜித்தின் எந்த படத்திற்கும் இல்லாத வரவேற்பு இந்த படத்திற்கு கிடைத்திருப்பதால் அஜித் மற்றும் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி