வாஷிங்டன்:-புளூட்டோ கிரகத்தை ஆய்வு செய்ய அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் நியூ கரிசான்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அந்த விண்கலம் தற்போது புளூட்டோவில் இருந்து 20 கோடியே 30 லட்சம் கி.மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்தபடியே நியூ கரிசான்ஸ் விண்கலத்தில் உள்ள லோர்ரி என்ற அதி நவீன டெலஸ்கோப் போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.
புளூட்டோவையும் அதன் மிகப்பெரிய சந்திரன் ஆன சரோனையும் போட்டோ எடுத்துள்ளது. இவை வெளிச்சம் போன்று மிக சிறிய புள்ளிகளாக தெரிகின்றன. குட்டையான சிறிய கிரகமான புளூட்டோவை ஆராய நியூ கரிசான்ஸ் விண்கலம் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பப்பட்டது. அதை மேரிலேண்டில் உள்ள லாரல் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக இயற்பியல் விஞ்ஞானிகள் வடிவமைத்து அனுப்பினர். நியூ கர்சான்ஸ் விண்கலம் அருகில் நெருங்கும் பட்சத்தில் புளூட்டோ கிரகத்தை பெரிய நூற்றுக்கணக்கான போட்டோக்களை எடுத்து அனுப்பும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி