அதாவது புலி படத்தில் விஜய் பார்க்க எப்படி இருப்பார் என்பது தான் அந்த எதிர்பார்ப்பு. இந்நிலையில் தான் ரசிகர்களுக்கு ஒரு இனிய செய்தியாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இந்த மாதம் வெளிவரும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தது. ஆனால் தற்போது படக்குழுவிடம் விசாரித்த போது, இன்னும் ஃபர்ஸ்ட் லுக் எந்த ஒரு விஷயத்தையும் நாங்கள்முடிவு செய்யவில்லை. அதற்குள் எப்படி இந்த மாதிரியான செய்திகள் வெளியாகிறது என்று தெரியவில்லை. படப்பிடிப்பில் இயக்குநர் சிம்புதேவன் மற்றும் விஜய் என அனைவருமே மும்முரமாக இருக்கிறார்கள். இன்னும் 65 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது.புலி படத்தில் நிறைய நடிகர்கள் இருப்பதால் எந்த மாதிரி ஃபர்ஸ்ட் லுக் பண்ணலாம் என்று கூட விவாதிக்கவில்லை.
படப்பிடிப்பை முதலில் முடிக்கலாம் என்பதிலே எங்களது முழுக்கவனமும் தற்போது இருக்கிறது. படத்துக்கான இறுதி கட்டப் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.படப்பிடிப்பு துவங்கும் முன்பே, படம் எப்படி வர வேண்டும் என்பதில் இயக்குநர் சிம்புதேவன் தெளிவாக சொல்லி விட்டதால் இறுதிகட்டப் பணிகளில் எந்த ஒரு தொய்வும் இல்லை.இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான தயாரிப்பு படத்துக்கு ஃபர்ஸ்ட் லுக் என்பதும் பிரம்மாண்டமாக தான் இருக்கும். அனைத்தும் முடிவான உடன் முறைப்படி அறிவிக்கிறோம் என்று கூறினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி