சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதில் குறிப்பாக வெளி நாட்டு வாழ் தமிழர்களுக்கும் இப்படம் மிகவும் பிடித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ் நாட்டு வசூல் நிலவரங்கள் வெளிவந்துள்ளது. இதை தமிழகத்தின் முன்னணி ஆங்கில பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
இதில் இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ 11.5 கோடி எனவும், இரண்டாம் நாள் ரூ 9.33 கோடி முறையே மொத்தம் ரூ 20.83 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், எந்த விழாக்காலம் இல்லாமல் சாதரண நாட்களில் படம் வெளிவந்து அதிக வசூல் செய்துள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி