‘செஸ்னா 150 கே’ எனப்படும் சிறிய ரக விமானம் ஒன்று கடந்த மே மாதம் 31ம் தேதி கொலராடோ பகுதியில் பறந்து கொண்டிருந்தது. விமானியும், ஒரு பயணியும் இருந்த அந்த விமானம் வாட்கின்ஸ் அருகே திடீரென விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது. இதில், விமானம் குறைந்த உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, விமானி செல்பி எடுத்துக்கொண்டதும், இதனால் அவரது கவனம் சிதறி விபத்து ஏற்பட்டது என்றும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அம்ரித்பால் சிங் என்ற அந்த விமானியின் செல்பி மோகத்தால், அவரது உயிர் மட்டுமின்றி ஜதிந்தர் சிங் என்ற பயணியின் உயிரும் போய்விட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி