வாக்காளரின் உபசரிப்பாலும், அன்பு மிகுதியாலும் நெகிழ்ந்துபோன அவருடைய கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது. பின்னர் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தவாறே கிரண்பேடி வாக்காளர்கள் மத்தியில் பேசினார்.அவர் கூறியதாவது:- என் மீது நீங்கள் கொண்டிருக்கும் அளவு கடந்த பாசத்தை விவரிக்க எந்த வார்த்தையும் இல்லை. இதை உங்கள் மீது மீண்டும் அன்பாக வெளிப்படுத்துவேன். தொடர்ந்து மக்களுடைய அன்பை பெறுவதற்காக என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன். உங்களுக்காக நேர்மையான முறையில் பணியாற்றுவேன். முறைகேடாக வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டதற்கு கெஜ்ரிவால் தைரியம் இருந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என்று சவால் விடுகிறார்.
இதை பரபரப்பு செய்தியாக ஆக்குவதற்காகத்தான் அவர் இப்படி பேசுகிறார். எந்த வகையிலும் தன்னைப் பற்றிய செய்தி வெளியாகவேண்டும் என்பதில் குறியாக இருப்பவர்தான் அவர். அவரைப் பற்றி நான் முன்பே அறிவேன். எப்போதுமே அவர் எதிர்மறையானதையே விரும்புவார். அவருக்கு தேவை அதுதான்.ஜெயிலுக்கு போகவேண்டும். அதன் மூலம் மக்களை தவறாக திசை திருப்பி ஓட்டுகளை பெறவேண்டும் என்பதே அவருடைய நோக்கம். அதற்காகத்தான் அவர் இப்படி சொல்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி