ஐதராபாத்:-ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பன்றிகாய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பன்றிகாய்ச்சலால் 34 பேர் உயிரிழந்துள்ளதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
மேலும், கடந்த ஜனவரி 1 முதல் பிப்ரவரி வரை 1,978 பேருக்கு பன்றிகாய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு, அதில் 668 பேருக்கு எச்1 என்1 வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், நேற்று ஒரு நாள் மட்டும் நடத்திய சோதனையில் 39 பேருக்கு பன்றிகாய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்றிகாய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி