சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் நடிப்பில் கத்தி திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் முதல் நாள் வசூல் தமிழகத்தில் மட்டும் ரூ 12 கோடி. இந்நிலையில் கத்தியை சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த லிங்கா முறியடித்ததாக கூறப்பட்டாலும் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக ஏதும் அறிவிக்கப்படவில்லை.
இந்த பொங்கலுக்கு ரிலிஸ் ஆன ஐ படம் பெரிய ஓப்பனிங் இருந்து ரூ 10.5 கோடி தான் முதல் நாள் வசூல் வந்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது கத்தி தான் தற்போது வரை டாப் லிஸ்டில் உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி