செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் ரஷியா மீது புதிய பொருளாதார தடை இல்லை – ஐரோப்பிய நாடுகள் முடிவு!…

ரஷியா மீது புதிய பொருளாதார தடை இல்லை – ஐரோப்பிய நாடுகள் முடிவு!…

ரஷியா மீது புதிய பொருளாதார தடை இல்லை – ஐரோப்பிய நாடுகள் முடிவு!… post thumbnail image
பிரஸ்சல்ஸ்:-உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே மீண்டும் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. டண்ட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதிகளுக்கு இடையே உள்ள முக்கிய ரெயில் நிலையமான டெபால்ட்சேவ் பகுதியில் இரு படையினரும் தொடர்ந்து குண்டு மழை பொழிவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு பங்கு இல்லை என அந்த நாடு தொடர்ந்து கூறி வரும் நிலையில், ரஷியாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே பொருளாதார தடை விதித்து உள்ளன. ரஷியாவில் உள்ள ஏராளமான செல்வந்தர்களின் சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளதுடன், அவர்களுக்கு பயண தடையும் விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ரஷியா மீது மேலும் பொருளாதார தடை விதிக்க இந்த நாடுகள் பரிசீலித்து வந்தன.

ஆனால் பிரஸ்சல்சில் நேற்று நடந்த ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில், ரஷியா மீது புதிய பொருளாதார தடை விதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும் ஏற்கனவே ரஷியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த தடையில் மேலும் சில ரஷியர்களை இணைப்பது குறித்து பரிசீலிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி