சென்னை:-சூப்பர் குட் நிறுவனத்தில் மானேஜராக பணியாற்றியவர் செந்தில் கணேஷ். இவர் வைத்தீஸ்வரன், வெடிகுண்டு முருகேசன் என பல படங்கள் தயாரித்தார். தற்போது ஜீவா நடிக்க ஒருபடம் தயாரித்து வருகிறார். தலைப்பு முடிவாகவில்லை. ராம்நாத் படத்தை இயக்குகிறார். ஆனால் படப்பிடிப்பு இன்னும தொடங்கவில்லை. காரணம் நாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டு தற்போது மழுப்பி வருகிறாராம் நயன்தாரா.
நயன் மறுத்துவிட்டால் ஸ்கிரிப்டை மாற்ற வேண்டிய நிலை உருவாகிவிடும் என்கிறார் இயக்குநர். நயனுக்காகவே உருகி உருகி உருவாக்கப்பட்ட ஸ்கிரிப்ட் இதை மாற்றமுடியாது என்று இயக்குநர் நாயகனிடம் கூறிவிட்டாராம். அதனால் ஜீவா மற்றும் நயனுக்கு நெறுக்கமான ஹீரோக்கள் மூலம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி