அங்கு தயாராக நின்றிருந்த தனது ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில், தன் மனைவி மிச்செலியுடன் ஏறினார். அவர்களை மத்திய மந்திரி பியுஷ் கோயல் மற்றும் உயர் அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர். விமானத்தில் ஏறியவுடன், வழி அனுப்ப வந்திருந்தவர்களை பார்த்து ஒபாமாவும், அவருடைய மனைவியும் கையசைத்தனர். இந்தியாவுக்கு வந்தபோது கூறியதைப் போலவே, விடை பெற்ற போதும் ‘நமஸ்தே’ என்று கூறினர்.
ஒபாமாவின் விமானம் மேலே எழும்பத் தொடங்கியவுடன், ஒபாமா சார்பில் வெள்ளை மாளிகை, சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தியை வெளியிட்டது. மறக்க முடியாத பயணத்துக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய மக்களுக்கு அவர்கள் காட்டிய அன்பான வரவேற்புக்கும் நன்றி என்று ஒபாமா சார்பில் அதில் கூறப்பட்டு இருந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி