செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் உயர வாய்ப்பு!…

கச்சா எண்ணெயின் விலை மீண்டும் உயர வாய்ப்பு!…

கச்சா எண்ணெயின் விலை மீண்டும் உயர வாய்ப்பு!… post thumbnail image
லண்டன்:-கடந்த 2013ம் ஆண்டு சிரியா போரை காரணமாகக் கொண்டு வாழ்நாள் உச்சபட்ச விலையை தொட்ட கச்சா எண்ணெய் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத அளவில் சர்வதேச சந்தையில் விலை சரிந்து வர்த்தகமானது. இதையடுத்து, இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலையும் படிப்படியாக குறைக்கப்பட்டது.

தற்போது ஒரு பேரல் 45 டாலர்கள் முதல் 55 டாலர்கள் வரை வர்த்தகமாகி வருகிறது. அதிகமான சப்ளை, தேவைப்பாடு குறைவு, டாலரின் வெளிமதிப்பு வலுப்பெற்று வருவது போன்ற காரணங்களால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்தது. ஒரு பேரல் 45 டாலருக்கும் கீழ் வர்த்தகமாகி வந்தது. இந்நிலையில், திடீரென வெள்ளிக்கிழமையன்று சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா காலமானார். இதைத்தொடர்ந்து சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலையில் நிச்சயமற்ற தன்மை நிலவியது. சற்றே உயர்ந்து 49 டாலராக வர்த்தகமானது.

இந்நிலையில், கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் ஒபேக் நாடுகளின் கூட்டமைப்பு விரைவில் விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதுபற்றி, ஒபேக் கூட்டமைப்பின் தலைவர் அப்துல்லா அல்-பத்ரி கூறுகையில், ஒபேக் நாடுகள் திடீரென உற்பத்தியை நிறுத்தியதாலும், தற்காலிக தட்டுப்பாடு காரணமாகவும், முதலீடு குறைந்ததன் எதிரொலியாகவும் விரைவில் கச்சா எண்ணெய்யின் விலை மீண்டும் உயரத் தொடங்கும் என்றார். அப்படி உயரும் பட்சத்தில் 200 டாலர் வரை கூட அதிகரிக்கலாம். இனி மீண்டும் 45 டாலருக்கு கீழ் வர வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி