சென்னை:-இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வரும் புதிய படம் ‘ஆக்கோ’. இப்படத்தை புதுமுக இயக்குனர் ஷாம் குமார் இயக்கி வருகிறார். தீபன் பூபதி, ரதீஷ் வேலு ஆகியோர் ரெபெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் விளம்பரங்கள் பெரும்பாலும் அனிருத்தை மையப்படுத்தியே வெளியாகி வருகின்றன. இப்படத்தின் கதையை கேட்டு மிகவும் வியந்த அனிருத், இந்த படத்திற்காக மிகச் சிறந்த பாடல்களை இசையமைத்துக் கொடுத்துள்ளார்.
இப்படத்தில் இவருடைய இசையில் அமைந்துள்ள ‘எனக்கென யாருமில்லையா’ என்ற சிங்கிள் பாடலை வரும் காதலர் தின பரிசாக அனிருத் வெளியிடவுள்ளார். இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடல் அவரது இதயத்துக்கு அருகில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி