சராசரியாக ஒரு மனிதனின் பாதிக்கும் மேற்பட்ட பகல் நேரம் டிவி முன்போ, கம்ப்யூட்டர் முன்போ உட்கார்ந்தவாறே கழிகிறது. அவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்தாலும் கூட இருதய நோய், நீரிழிவு, புற்று நோய் தாக்கும் அபாயத்தில் இருந்து தப்பிக்க முடியாது.
உடற்பயிற்சி செய்யாதவர்களையும், மிதமான உடற்பயிற்சி செய்பவர்களையும் இந்த நோய் அதிகம் தாக்குகிறது. அதிக அளவில் உடற்பயிற்சி செய்பவர்களை இந்த நோய்கள் குறைவாகவே தாக்குகின்றன. எந்த அளவுக்கு உடற்பயிற்சி செய்தால் நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்களை இந்த நோய்கள் தாக்காது என்பதை அறிய மேற்கொண்டு ஆய்வுகள் நடத்த வேண்டும். எனவே நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி