செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு 6 உலக கோப்பையில் விளையாடிய வீரர்கள் – ஒரு பார்வை!…

6 உலக கோப்பையில் விளையாடிய வீரர்கள் – ஒரு பார்வை!…

6 உலக கோப்பையில் விளையாடிய வீரர்கள் – ஒரு பார்வை!… post thumbnail image
உலககோப்பை போட்டியில் பாகிஸ்தானை சேர்ந்த ஜாவித் மியான்டட், கிரிக்கெட் சகாப்தமான தெண்டுல்கர் ஆகியோர் தான் அதிகபட்சமாக 6 உலககோப்பையில் விளையாடி உள்ளனர். மியான்டட் 1975ம் ஆண்டு உலககோப்பையில் அறிமுகம் ஆனார். அப்போது அவருக்கு 18 வயதாகும். 1979, 1983, 1987, 1992, 1996 ஆகிய உலககோப்பையிலும் அவர் விளையாடி உள்ளார்.

தெண்டுல்கர் 1989ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். 1992ம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பையில் அவர் முதல் முறையாக விளையாடினார். அப்போது அவருக்கு 19 வயதாகும். அதை தொடர்ந்து தெண்டுல்கர் 1996, 1999, 2003, 2007, 2011 ஆகிய உலககோப்பையில் ஆடி உள்ளார். அவர் 45 ஆட்டத்தில் 2278 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இதில் 6 சதமும், 15 அரை சதமும் அடங்கும். சராசரி 56.95 ஆகும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி