செய்திகள்,விளையாட்டு தவானின் மோசமான ஆட்டம் உலககோப்பையில் பாதிப்பை ஏற்படுத்துமா?…

தவானின் மோசமான ஆட்டம் உலககோப்பையில் பாதிப்பை ஏற்படுத்துமா?…

தவானின் மோசமான ஆட்டம் உலககோப்பையில் பாதிப்பை ஏற்படுத்துமா?… post thumbnail image
உலககோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 14ம் தேதி தொடங்குகிறது. 15 பேர் கொண்ட இந்திய அணியில் தொடக்க வீரராக ஷிகார் தவான் உள்ளார். ஆனால் அவரது பேட்டிங் பார்ம் கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சோபிக்க தவறிய அவர் 3 நாடுகள் கிரிக்கெட் போட்டியிலும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை இந்தியா விளையாடிய 3 ஆட்டத்தில் தவான் முறையே 2,1 மற்றும் 8 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

உலககோப்பை போட்டி தொடங்க இன்னும் 17 நாட்களே இருக்கும் வேளையில் தவானின் மோசமான ஆட்டம் உலககோப்பையில் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்று அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது. உலககோப்பையில் ரோகித்சர்மா– ஷிகார் தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. மோசமான ஆட்டத்தால் தவான் நீக்கப்பட்டால் ரோகித் சர்மாவுடன் ரஹானே தொடக்க வீரராக களம் இறங்கும் சூழ்நிலை ஏற்படும். இதனால் மிடில்–ஆர்டர் வரிசையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியது வரும். இதில் சாதகம் ஏற்படுமா? அல்லது பாதகத்தை உண்டாக்குமா? என்பது வீரர்களின் ஆட்டத்தை பொறுத்து அமையும்.

இப்படி ரிஸ்க் எடுப்பதை தவிர்க்க ஷிகார் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவர் கீப்பர் மற்றும் ஸ்லிப் பகுதியில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதில் அவர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவருக்கு கேப்டன் டோனி அறிவுரை கூறுகையில், கில்கிறிஸ்ட் போல அதிரடியாக விளையாட ஆரம்பிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். ஆனாலும் தவானின் மோசமான பார்ம் தொடர்கிறது. ஏற்கனவே பந்துவீச்சில் பலவீனமாக காணப்படும் இந்திய அணி தற்போது தவானால் கவலையில் இருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி