இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி டெல்லி ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. டெல்லியில் பெண்கள் பாதுகாப்புக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை கண்காணிக்க நியமனம் செய்யப்பட்டுள்ள அதிகாரி, இந்த தகவலை நீதிபதியிடம் தெரிவித்தார்.ஒபாமாவுக்கு செய்யப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடு பற்றி அறிந்ததும், டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி ஆச்சரியம் அடைந்தார். அவர் கூறியதாவது:–
வெளிநாட்டில் இருந்து முக்கியத் தலைவர் வருகிறார் என்றதும் நீங்கள் 15 ஆயிரம் கண்காணிப்பு காமிராக்களை பொருத்தி இருக்கிறீர்கள். ஆனால் இந்திய குடிமக்களுக்காக இப்படி செய்வதில்லை.பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யுங்கள் என்று நாங்கள் உத்தரவிட்டால் கூட நீங்கள் மாத கணக்கில், ஆண்டு கணக்கில் செய்வது இல்லை. ஆனால் ஒபாமா என்றதும் ஒரே வாரத்தில் செய்து முடித்து விட்டீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி