சென்னை:-சிம்புதேவனின் ‘புலி படத்தில் பிசியாக நடித்து வருகிறார் விஜய். இந்த படத்திற்கு அடுத்து விஜய் அட்லீ இயக்கத்தில் நடிப்பார் என முன்பே அறிவிக்கப்பட்டது போல் ’புலி’ படத்தின் படப்பிடிப்புகள் முடிவிற்கு பிறகு இந்த படம் துவங்க உள்ளது.
’நண்பன்’ படத்தில் கல்லூரி மாணவனாக நடித்த விஜய் இந்த படத்திலும் கல்லூரி மாணவனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. படத்தின் ஹீரோயின், மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. அட்லீ என்பதால் இந்த படத்தில் நயன்தாராவின் பெயரும் அடிபடுவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இணையத்தில் வெளியான அட்லி , கலைப்புலி தாணு, மற்றும் விஜய்யுடன் இணைந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ள இப்படம் 2016 பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி