இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சரிதாநாயர் ஒரு குறும்படத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். ‘கல்புகாரன்டே பார்யா’ என்ற இந்த படத்தில் அரபு நாட்டில் பணிபுரியம் ஒரு தொழிலாளியின் மனைவியாக இவர் நடித்துள்ளார். கேரளாவில் தனிமையில் வசித்து வரும் அரபு நாட்டு தொழிலாளியின் மனைவி சந்திக்கும் பிரச்சினைகள் தான் இந்த படத்தின் கருவாகும்.
வெறும் 15 நிமிடங்கள் மட்டும் ஓடும் இந்த படம் யூ–டியூபில் வெளியானது. முதல் நாளிலேயே இந்த படம் யூ–டியூப் ஹிட் லிஸ்டில் இடம் பிடித்துவிட்டது. 24 மணி நேரத்தில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த படத்தை பார்த்து ரசித்துள்ளனர். இதனால் நாளுக்குநாள் இந்த படத்தை பார்ப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என நம்புவதாக குறும்படத்தை இயக்கிய ஜோஷி மேடையில் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி