புதுடெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தல், அடுத்த மாதம் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, ஆம் ஆத்மி கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், நேற்று வடமேற்கு டெல்லியில், சுல்தான்பூர் மஜ்ரா சட்டசபை தொகுதியில் ஜலேபி சவுக் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.
அப்போது, கூட்டத்தில் இருந்த மர்ம நபர், கற்களையும், முட்டைகளையும் அரவிந்த் கெஜ்ரிவாலை நோக்கி வீசி விட்டு தப்பினார். ஆனால், கற்களும், முட்டைகளும் கெஜ்ரிவால் மீது படவில்லை. அவர் பேசிக்கொண்டிருந்த மேடை அருகே விழுந்தன. சுல்தான்பூர் மஜ்ரா தொகுதியில், கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தப்படுவது, இது இரண்டாவது முறை ஆகும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி