அவர் ஓடி வருவதற்குள் கார் பறந்து சென்றது. குழந்தையும் காரில் உள்ளதே என்று பதைபதைத்த அவர் திரும்பவும் டே கேர் மையத்துக்குள் சென்று அவசர போலீஸ் எண் 911-ஐ தொடர்பு கொண்டார். தனது குழந்தையும், காரும் கடத்தப்பட்டதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார். காருக்குள் தனது செல்போனும் இருப்பதாக அவர் போலீசாரிடம் கூறினார். உடனடியாக எலிசபெத்தின் செல்போன் எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டனர். குழந்தை எய்டன் போனை எடுத்து போலீசாரிடம் பேசினான். காரை ஓட்டிவந்த நபர் வெளியே சென்றுள்ளதாக அவன் போலீசாரிடம் கூறினான். உடனே சமயோகிதமாக செயல்பட்ட போலீசார், எய்டனிடம் காரில் உள்ள ஹாரனை தொடர்ந்து அழுத்திக்கொண்டிருக்கும் படி கூறினர்.
இந்த தகவலை அப்பகுதியில் உள்ள ரோந்து போலீசாரிடமும் காவல் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் கூறினார். அவர்கள் விரைந்து செயல்பட்டு தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்த ஹாரன் சத்தத்தை வைத்து எய்டனையும், காரையும் மீட்டனர். 45 நிமிட இடைவெளியில் குழந்தையை தன்னிடம் சேர்ந்த காவல்துறையினருக்கு எலிசபெத் கைகூப்பி நன்றி கூறினார். அதே சமயத்தில் குழந்தையின் புத்திக்கூர்மையையும், அவனது செயல்பாட்டையும் காவல்துறையினர் பாராட்டினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி