ஐதராபாத்:-தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகர ராவ். இவரது மகள் கே.கவிதா எம்.பி.யாக இருக்கிறார். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
கவிதா எம்.பி. ஐதராபாத்தில் இருந்து நிஜாமாபாத்துக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஐதராபாத் திரும்பியதும் அவருக்கு காய்ச்சல், சளி ஏற்பட்டது. இதனால் முன் எச்சரிக்கையாக பன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்துகள் சாப்பிட்டு வருவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி