திருவிடைமருதூர்:-தஞ்சை மாவட்ட இந்து மக்கள் கட்சி செயலாளர் பாலா. இவர் இன்று கும்பகோணம் கோர்ட்டில் நடிகை குஷ்பு மீது வழக்கு தொடர்ந்தார்.அதில் அவர் கூறி இருப்பதாவது:– வார இதழ் ஒன்றில் நடிகை குஷ்பு தாலியில் ருத்ராட்ச கொட்டை கோர்த்து அணிந்திருப்பது போன்ற படம் வெளியாகி உள்ளது. இது இந்து மதத்திற்கு எதிரானது. மேலும் இந்து மதத்தை புண்படுத்துவது போல் அமைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து வழக்கு தொடர்ந்த பாலாவிடம் கேட்ட போது, இந்த விவகாரம் தொடர்பாக மடாதிபதிகள், ஆதீன கர்த்தர்கள், இந்து மத தலைவர்களிடம் கருத்து கேட்டேன். அவர்கள் இது தவறான செயல் என தெரிவித்தனர். அதன் பின்னர் தான் வழக்கு தொடர்ந்துள்ளேன் என்றார். அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி