அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் கருப்பு பணத்தை ஒழிக்க சிறந்த வழி ஆன்லைன் பண பரிவர்த்தனை தான்: மோடி பேச்சு!…

கருப்பு பணத்தை ஒழிக்க சிறந்த வழி ஆன்லைன் பண பரிவர்த்தனை தான்: மோடி பேச்சு!…

கருப்பு பணத்தை ஒழிக்க சிறந்த வழி ஆன்லைன் பண பரிவர்த்தனை தான்: மோடி பேச்சு!… post thumbnail image
மும்பை:-மும்பையில், ஒரு தனியார் வங்கி தத்தெடுத்த கிராமத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- கருப்பு பணத்தை ஒழிக்கும் எத்தனையோ வழிகளில், கரன்சி நோட்டுகள் இல்லாமல், ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்யும் வழி முக்கியமானது. கருப்பு பணத்தை ஒழிக்க இதுதான் சிறந்த வழி. அது ஒரு நல்ல வாய்ப்பு. நாம் அதை ஊக்குவிக்க வேண்டும். பொதுமக்களும் ஆன்லைன் பரிவர்த்தனைக்கு பழகிக்கொள்ள வேண்டும். அதிகபட்சமான ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்வதில் வங்கிகள் ஒன்றுக்கொன்று போட்டியிட வேண்டும்.

இந்தியர்களுக்கு சேமிக்கிற நல்ல பழக்கம் உள்ளது. ஆனால், இந்த சேமிப்பெல்லாம் தங்கத்தின் மீது செய்யப்படுகிறது. அதுதான் பாதுகாப்பானது என்று தேவைக்கு அதிகமாகவே சிலர் தங்கத்தை வைத்திருக்கிறார்கள். சிக்கலான நேரத்திலும், தேவையான நேரத்திலும் தங்கம்தான் தங்களுக்கு கைகொடுக்கும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர். இந்த மனநிலையை மாற்ற வங்கிகள் பாடுபட வேண்டும். மக்கள், தங்கத்தில் பெருமளவு பணத்தை முதலீடு செய்வதை தடுக்க வேண்டும். தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பதிலாக, வங்கி கணக்கு தொடங்கச் செய்ய வேண்டும். வங்கி கணக்கு இருந்தால், தேவையான நேரத்தில் தங்கள் சேமிப்பை எடுத்துக்கொள்ளலாம் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். இந்த பணி சவாலானதுதான்.

இதை செய்வதன் மூலம், சமூக மாற்றத்தின் முகவர்களாக வங்கிகள் திகழ முடியும். இது, இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்துக்கு வழிவகுக்கும். உலகின் சில நாடுகளில், கிரெடிட் கார்டு கலாசாரம் உள்ளது. மக்கள் தங்கள் கைகளில் கிரெடிட் கார்டைத் தவிர வேறு எதையும் வைத்திருக்க மாட்டார்கள். ஆனால், நம் நாட்டில், அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் சேர்த்து சேமிக்கிற பாரம்பரியம் இருக்கிறது. வங்கிகள், மிகவும் சமூக பொறுப்புடன் திகழ வேண்டும். தூய்மை இந்தியா திட்டத்துக்கு உதவ வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி