நேற்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் 5 வது நாள் ஆட்டம் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவெ தொடங்கியது. இருப்பினும் வெறும் 3 பந்துகளே வீசிய நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் 40 நிமிடம் பாதிக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் தனது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் பெற்ற 65 ரன்கள் முன்னிலையுடன், இந்திய அணிக்கு 384 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணையித்தது. 384 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது. ஷிகர் தவான் ரன் எதுவும் இன்றி நடையை கட்டினார். முரளி விஜய் 11 ரன்களிலும் , கே.எல் ராகுல் 1 ரன்னிலும் வெளியெறினர். இதனால் இந்திய அணி 19 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலியும் ரகேனேவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விராட் கோலி 54 ரன்கள் எடுத்து இருந்த போது ஹரீஸ் பந்தில் வெளியேறினார். தொடர்ந்து புஜாரா 21 ரன்னிலும் ரகனே 48 ரன்களிலும் வெளியேறினர். இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து இருந்த போது ஆட்டம் நிறைவு அடைந்ததால் இப்போட்டி டிராவில் முடிந்தது. தோனி 24 ரன்களிலும் அஷ்வின் 8 ரன்களிலும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜான்சன், ஹேசல்வூட், ஹரீஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், 3 போட்டிகள் முடிந்த நிலையில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையுடன் தொடரை கைப்பற்றியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி