செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் மாயமான ஏர் ஏசியா விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு?…

மாயமான ஏர் ஏசியா விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு?…

மாயமான ஏர் ஏசியா விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு?… post thumbnail image
இந்தோனேஷியா:-155 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் இந்தோனேஷியாவின் சுரபவா நகரில் இருந்து மலேசியாவைச் சேர்ந்த ‘ஏர் ஏசியா’ நிறுவனத்துக்கு சொந்தமான ‘ஏ320-200’ ரக விமானம், சுரபவா நகரில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் ஜாவா கடல் பகுதியில் சென்றபோது 6.24 மணிக்கு விமான கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை விமானம் முற்றிலுமாக இழந்தது. இதைத் தொடர்ந்து விமானம் காணாமல் போனதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து விமானத்தை தேடும் பணியில் இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில், மாயமான விமானத்தின் பாகங்கள் கடலில் மிதப்பாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்தோனேஷிய விமான அதிகாரி ஆகஸ் ட்வி புட்ரண்டோ கூறுகையில், நாங்கள் 10 பெரிய பொருட்கள் மற்றும் சில வெள்ளை நிற சிறிய பொருட்கள் கடலில் மிதப்பதை கண்டறிந்தோம். விமானம் மாயமான இடத்தில் இருந்து 10 கீ.மீட்டர் தொலைவில் இவை மிதக்கின்றன. என்றார்.

விமானத்தின் கதவு, அவசர வழி, உள்ளிட்ட பாகங்கள் மிதக்கும் படத்தையும் அவர் வெளியிட்டார். கடலில் மிதக்கும் இந்த பாகங்கள் காணமல் போன விமானத்தினுடயதா என விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதே இடத்தில் உயிர் காக்கும் உடைகள், ஆரஞ்சு நிற குழாய்களும் கடலில் மிதப்பாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் புகைப்படம் வெளியிட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி