தற்போது தீபிகா படுகோனே சாப்பிடும் உணவு வகைகள் விவரம் வெளியாகியுள்ளது. தினமும் காலை எழுந்ததும் ஒரு கப் லெமன் டீ குடிக்கிறார். சிறிது நேரம் கழித்து ஒரு கிளாஸ் பால் அருந்துகிறார். அதன் பிறகு உடற் பயிற்சி கூடத்துக்கு சென்று கடும் உடற் பயிற்சிகள் செய்கிறார்.
உடற்பயிற்சி முடிந்ததும் முட்டைகளும் பழங்களும் சாப்பிடுகிறார். அதன் பிறகு படப்பிடிப்புக்கு செல்கிறார். காலை உணவாக இட்லியோ தோசையோ அல்லது இரண்டும் சேர்த்தோ சாப்பிடுகிறார். மதிய உணவாக அவித்த காய்கறிகளுடன் சூப் சாப்பிடுகிறார். மதிய உணவின் போது கண்டிப்பாக அசைவ உணவாக சிக்கன் டிக்கா இருக்க வேண்டுமாம். நாள் முழுவதும் உலர்ந்த பழவகைகளையும் தின்று கொண்டே இருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி