கடந்த ஞாயிறு இரவு 11.30 மணிக்கு சியாரோ லியோனிலிருந்து விமானம் மூலம் ஸ்காட்லாந்து வந்து சேர்ந்த இவர், உடல் நலம் சரியில்லாத காரணத்தால் கர்ட்னாவல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு எபோலா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று காலை அவர் மற்ற நோயாளிகளிடமிருந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டார். தற்போது சிறப்பு மருத்துவர்களால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நோய்க்கான அறிகுறி தென்பட்ட உடனே கண்டுபிடிக்கப்பட்டதால், மற்றவர்களுக்கு பரவும் அபாயம் மிகவும் குறைவு என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். நோயாளியுடன் தொடர்பில் இருக்கக்கூடிய அனைவரிடமும் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதாகவும் பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. மக்களின் நலத்தைக் காப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்தார். எபோலா நோயாளிகளைக் காப்பாற்றுவதில் ஈடுபட்ட அந்தப் பெண் குணமடைய பிரிட்டன் மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி