டேராடூன்:-உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில் உள்ள வஸந்த் விஹார் பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமி கடந்த வியாழக்கிழமை இரவு தனது வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் கடைக்கு சென்றாள். அவளை வழிமறித்த அதே பகுதியில் வசிக்கும் சிறுவன் ஏதேதோ காரணம் கூறி, தனிமையான ஒரு இடத்துக்கு அந்த சிறுமியை அழைத்து சென்றான்.
தனிமையை பயன்படுத்தி தங்களது மகளை அந்த சிறுவன் கற்பழித்து விட்டதாக அவளது பெற்றோர் போலீசில் நேற்று புகார் அளித்தனர். இதனையடுத்து, அந்த சிறுமிக்கு நடத்தப்பட்ட மருத்துவப்பரிசோதனையில் அவள் கற்பழிக்கப்பட்டது சந்தேகத்துக்கிடமின்றி உறுதியானது. இதனையொட்டி, அந்த 16 வயது சிறுவனை கைது செய்த போலீசார், சிறுமியை கற்பழித்ததாக வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அந்த குற்றவாளியை இளஞ்சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி