செய்திகள்,திரையுலகம் நடிகை நஸ்ரியாவின் கணவர் மீது மோசடி புகார்!…

நடிகை நஸ்ரியாவின் கணவர் மீது மோசடி புகார்!…

நடிகை நஸ்ரியாவின் கணவர் மீது மோசடி புகார்!… post thumbnail image
சென்னை:-நடிகை நஸ்ரியா தமிழில் ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் மலையாள நடிகர் பகத் பாசிலுக்கும் கடந்த வருடம் திருவனந்தபுரத்தில் திருமணம் நடந்தது. பகத் பாசில் மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார். பகத்பாசில் மீது மலையாள தயாரிப்பாளர் சங்கத்தில் பிரபல தயாரிப்பாளர் எம்.மணி புகார் அளித்துள்ளார். புகார் மனுவில் அவர் கூறி இருப்பதாவது:–

பகத்பாசிலை எனது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தேன். அந்த படத்துக்கு ஐயர் இன் பாகிஸ்தான் என பெயரிடப்பட்டு இருந்தது. இந்த படத்தில் நடிப்பதற்காக பகத் பாசிலுக்கு குறிப்பிட்ட தொகையை முன் பணமாக கொடுத்தேன். படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த நிலையில் படத்தில் இருந்து பகத்பாசில் திடீரென விலகிவிட்டார். கதை எனக்கு பிடிக்கவில்லை எனவே நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கூறயுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி