சென்னை:-தமிழ் சினிமாவில் கதாநாயகி என்றாலே 2 அல்லது 3 வருடம் தான் அவர்களது திரைப்பயணம் இருக்கும். பிறகு வெளிநாட்டு மாப்பிள்ளை அல்லது தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள்.
அந்த வகையில் நடிகை திரிஷா மட்டும் விதிவிலக்காக தொடர்ந்து சினிமாவில் 10 வருடங்களாக முன்னணி நாயகியாகவே இருந்து வருகிறார். இந்நிலையில்,திரிஷா தன்னுடைய திரைபயணத்தில் 11 ஆண்டுகள் முடிந்து,12வது வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறாராம். இந்த தகவலை த்ரிஷாவின் காதலன் என்று கூறப்படும் வருண் மணியன், அவருடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி