மும்பை:-ஒவ்வொரு புத்தாண்டின் போதும் பல ஹோட்டல்களில் மக்களின் அளவில்லா சந்தோஷத்தை பார்க்கலாம். இவர்களின் சந்தோஷங்களை மேலும் மெருகூட்ட ஹோட்டல் நிர்வாகம், நடிகைகளை அழைத்து அவர்களின் நடனத்தை இடம் பெறச்செய்வார்கள். அதிலும் இந்த மாதிரியான நடனங்களுக்கு பாலிவுட் நடிகைகளிடம் மிகுந்த வரவேற்புள்ளது.
இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்டு வரும் நபராக உள்ளவர் கவர்ச்சி நடிகை சன்னி லியோன். இவரும் புத்தாண்டு தினமன்று இரவில் நடனமாடுகிறார். ஹைதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் 31ம் தேதி இரவு நடனம் ஆட ஒப்புகொண்டுள்ளதாகவும், இதற்காக நட்சத்திர ஹோட்டல் நிரவாகம் 5 கோடி ரூபாய் சம்பளம் தர முன் வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மற்ற நடிகைகள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி