சென்னை:-‘என்னை அறிந்தால்’ படத்தின் டீஸர் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வந்தது. அதோடு சமீபத்தில் தான் படத்தில் இடம் பெரும் ‘அதாரு அதாரு’ என்ற பாடல் ஆடியோ வடிவில் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் ரசிகர்களுக்கு படத்தை பற்றிய ஒரு தகவல் தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும் என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. இந்த வசனம் அஜித்தை ரொம்பவும் கவர்ந்தது என்று படக்குழுவில் கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி