அதன்பின்னர் அவரது வீட்டு உரிமையாளர் சம்பளம் கொடுக்க மறுத்ததுடன் அரசின் நலவாழ்வு மையத்தில் அவரை கட்டாயப்படுத்தி தங்க வைத்துள்ளார். அவர் வேறு யாரிடமும் பேசவோ, தொடர்பு கொள்ளவோ அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், கடும் கண்காணிப்பையும் மீறி கடந்த 2 மாதங்களுக்கு கேரளாவைச் சேர்ந்த ஒருவரை சந்திக்க ஷாம்சம்மாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது, அவர் கொடுத்த ஆலோசனைப்படி, தனது உறவினர் மூலம் இந்திய தூதரகத்திடம் புகார் அளித்துள்ளார். பின்னர் தூதரக அதிகாரிகள், உள்ளூர் போலீசாரின் உதவியுடன் ஷாம்சம்மா இருக்குமிடத்தை அறிந்து, அவருக்கு சேரவேண்டிய சம்பள பாக்கியை பெற்றுத் தர நடவடிக்கை எடுத்தனர்.
தூதரகம் தலையிட்டதையடுத்து வீட்டு உரிமையாளர், அந்த பெண்ணுக்கு வழங்க வேண்டிய 33 ஆயிரம் ரியால்களை (8792 டாலர்) வழங்க ஒப்புக்கொண்டார். இதற்காக 3 வாரங்கள் அவகாசம் கேட்டுள்ளதாக அரபு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், 3 வாரங்கள் கடந்த பிறகும் வீட்டு உரிமையாளர் கூறியபடி பணத்தை கொடுக்கவில்லை என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. எனினும், தூதரகம் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும், ஷாம்சம்மா விரைவில் தனது சம்பளத் தொகையை பெற்றுக்கொண்டு நாடு திரும்புவார் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி