வாழ்க்கையின் பல தரப்பட்ட மக்களை ஒன்றிணைக்க அவர் சோர்வின்றி உழைத்தார். ஏழைகளின் காவலனாக இருந்து அவர்களின் நியாயத்துக்காகவும், நீதி கிடைக்கவும் அவர் தொண்டாற்றினார்.
சமீப காலமாக, தங்களது மாநிலத்தை சேர்ந்த பிரபலங்கள் ஆற்றிய சமூக தொண்டுக்காக அவர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று சிலர் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். அவ்வகையில், பால் தாக்கரேவுக்கு இந்த விருது வழங்க வேண்டும் என்று நான் கோரிக்கை எழுப்புவது, தவறாகி விடாது. இந்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த கோரிக்கையை ஆமோதிக்கும் விதமாக கருத்து தெரிவித்த மராட்டிய மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், ஏழை மக்களுக்காகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும் பால் தாக்கரே தொண்டாற்றியுள்ளார் என்பதில் சந்தேகமே இல்லை. அவருடன் யாரையும் ஒப்பிட முடியாது. இந்த கோரிக்கையைப் பற்றி மத்திய அரசு உரிய நேரத்தில் முடிவு செய்யும் என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி