மூன்று முறை நாட்டின் பிரதமராக இருந்துள்ள வாஜ்பாய் பா.ஜ.க.கட்சியை சேர்ந்தவர் என்ற வகையில் முதல் நபராக இந்த பாரத ரத்னா விருதை பெறுகிறார். கடந்த 2004 ஆம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக, சில வருடங்களாகவே பொது வாழ்க்கையில் இருந்து விலகி இருக்கிறார். நாளை தனது 90-வது பிறந்த நாள் வரும் நிலையில் அவருக்கு விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாசற்ற மாமனிதரான வாஜ்பாய் இந்த விருதுக்கு மிகவும் பொருத்தமானவர் என்று முன்னாள் துணை பிரதமர் அத்வானி கூறியுள்ளார். அதே போல் மஹாமானா என்றழைக்கப்படும் சுதந்திர போராட்ட வீரரான மதன் மோகன் மாளவியா இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு வகித்துள்ளார். இன்று நாட்டில் புகழ்பெற்று விளங்கும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை அன்னிபெசன்ட் அம்மையாருடன் சேர்ந்து நிறுவிய மாளவியா கல்விக்கு பெரும் தொண்டாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி