விபத்துக்குள்ளான அந்த விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்காததால் அது குறித்த மர்மம் நீடித்து வருகிறது. இந்நிலையில் பிரான்சை சேர்ந்த விமான நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மாரே துனகன் தற்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.இவர் பிரான்சின் புரோடியஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவராகவும் பணிபுரிந்தவர். தற்போது பிரெஞ்ச் இதழின் ஆசிரியராக உள்ளார். இவர் தனது பத்திரிகையில் மாயமான மலேசிய விமானம் குறித்து 6 பக்க கட்டுரை எழுதியுள்ளார். அதில் மாயமான மலேசிய விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கலாம். அதை 2001 ம் ஆண்டு செப்டம்பர் 9 ந்தேதி சம்பவத்தை போன்று அமெரிக்காவில் ஏதாவது கட்டிடத்தின் மீது மோதி தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருக்கலாம்.
அது பற்றி தகவல் அறிந்த அமெரிக்க ராணுவம் மீண்டும் பழைய துரதிஷ்டவசமான விரும்பத்தகாத சம்பவம் நடைபெறாமல் தடுக்க அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.டைகோ கார்சியா தீவில் இங்கிலாந்து ராணுவ தளம் அமைந்துள்ளது. அங்கு அதிநவீன சக்திவாய்ந்த கருவிகள் உள்ளன. அதன் மூலம் கண்டறிந்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற் கொண்டிருக்கலாம் என விளக்கியுள்ளார். ஆனால் இதை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது. மாயமான அன்று அந்த விமானம் அனைத்து ரேடார்களின் பார்வையில் இருந்து மறைந்து விட்டது என தெரிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி