சென்னை:-படங்களில் பிசியாக இருப்பதால், அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் நடிகர் விஷால் விளையாட மாட்டார் என்று செய்திகள் வெளிவந்தன. இதுகுறித்து, இத்தாலியில் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கு சினிமாவில் நடிப்பதுதான் முதலில் முக்கியம். ஆம்பள படம் பொங்கலுக்கு வெளிவர தயாராக உள்ளது. இதற்கான வேலைகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். ஆகையால், நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் இருந்து நான் விலகுகிறேன் என்று கூறியுள்ளார்.
விஷால், நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் தமிழ் நடிகர்கள் அணியில் கேப்டனாக பதவி வகித்து வந்தார். தற்போது, அவர் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுவதால், தமிழ் நடிகர்கள் அணியின் அடுத்த கேப்டன் பதவிக்கு ஜீவா, விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. இருந்தாலும் ஜீவாவே அடுத்த கேப்டனாக நியமிக்கப்படுவார் என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி