சென்னை:-ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக ஏறுமுகமாக இருந்தது. இதனால் ரூ. 19 ஆயிரத்தில் இருந்த ஒரு பவுன் ரூ. 20 ஆயிரத்து 400க்கு மேல் சென்றது. அதன் பின்னர் தங்கம் விலை குறைந்து வருகிறது.
இன்று தங்கம் பவுனுக்கு ரூ. 200 குறைந்தது. நேற்று மாலை 1 கிராம் ரூ. 2,543 ஆகவும், பவுன் ரூ. 20,344 ஆகவும் இருந்தது. இன்று காலை கிராமுக்கு ரூ. 25-ம், பவுனுக்கு 200-ஆகவும் குறைந்தது. ஒரு கிராம் 2,518–க்கும், ஒரு பவுன் ரூ.20,144 க்கும் விற்கப்பட்டது. இதே போல் வெள்ளி விலையும் குறைந்து காணப்பட்டது. கிராம் ரூ.38.50 ஆகவும், 1 கிலோ ரூ. 35,990 ஆகவும் இருந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி