லூயிஸ்வில்லி:-மூன்று முறை உலக ஹெவி வெயிட் சாம்பியன் பட்டம் பெற்ற பிரபல குத்துச் சண்டை வீரர் முகமது அலி நிமோனியா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கடந்த சனிக்கிழமை இரவு அவரது செய்தித்தொடர்பாளர் பாப் கன்னல் கூறுகையில், இன்று காலைதான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிமோனியா பாதித்துள்ளது ஆரம்பக்கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டதால் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை.
சில நாட்கள் மருத்துவமனையில் இருந்தால் சரியாகிவிடும் என்றார். தங்களின் அந்தரங்கம் பாதிக்கப்படும் என்ற அலியின் குடும்பத்திருடைய வேண்டுகோளை ஏற்று, அலி தற்போது எங்கு இருக்கிறார் என்பதை தெரிவிக்க அவர் மறுத்து விட்டார். 72 வயதாகும் முகமது அலி 1981-ல் குத்துச்சண்டை போட்டிகளிலிருந்து விடை பெற்றார். உலகம் முழுவதும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக பயணம் செய்த இவருக்கு 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி