December 16, 2014

செய்திகள், தொழில்நுட்பம், முதன்மை செய்திகள்

இந்தியாவில் தயாரான முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்: சோதனை ஓட்டம் தொடங்கியது!…

புதுடெல்லி:-இந்தியாவில் தயாரான முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ‘ஐ.என்.எஸ். அரிஹந்த்’-தின் சோதனை ஓட்டத்தை பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பரிகர் விசாகப்பட்டினத்தில் நேற்று தேசியக் கொடியேற்றி தொடங்கி வைத்தார். இந்த சோதனை ஓட்டத்தில் கப்பல் நீரில் மூழ்கும் திறன், கப்பலில் உள்ள ஆயுதங்களின் தாக்கும் திறன் மற்றும் கப்பலின் அனைத்து சாதனங்களும் பரிசோதிக்கப்படும். 6000 டன் எடை வரை சுமந்து செல்லும் இந்த அதி நவீன நீர்மூழ்கிக் கப்பலில், இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட 83 மெகாவாட் திறனுள்ள அழுத்த நீர் உலை உள்ளது. 3500 கிலோ மீட்டர் வரை கண்டம் விட்டு கண்டம் பாயும் கே-4 எனும் நான்கு அணுசக்தி ஏவுகணைகள் அல்லது 700 கிலோ மீட்டர் வரை இலக்கைத் தாக்கி அழிக்கும் போ-5 எனும் 12 ஏவுகணைகளை சுமந்து செல்லும் ஆற்றலை இந்த நீர்மூழ்கி கப்பல் தன்னுள் கொண்டது. அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் இன்னும் இரண்டு வருடங்களில் இந்த நீர்மூழ்கிக் கப்பல் பயன்பாட்டுக்கு வரும். அப்படி வரும் நிலையில், உலகில் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை வடிவமைத்து, உருவாக்கி அதைப் பயன்படுத்தும் ஆறு நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். இந்தியாவிடம் தற்போது இருக்கும் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். சக்ரா அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் திறனற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள், திரையுலகம்

விஸ்வரூபம் 2 பட ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி!…

சென்னை:-கடந்த வருடம் பல சர்ச்சைகளுக்கு பிறகு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் ‘விஸ்வரூபம்’. இந்த படத்தின் இரண்டாம் பாகம் நீண்ட நாட்களாக எடுத்து வருகின்றனர். இந்த படம் வருவதற்குள் நடிகர் கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன், பாபநாசம் ஆகிய படங்கள் வெளிவரும் நிலையில் உள்ளது. இது குறித்து சமீபத்தில் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் மிகவும் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளதாம். ஏற்கனவே ஐ படத்தால் பூலோகம் தள்ளி கொண்டே போகிறது. இந்நிலையில் விஸ்வரூபம்-2 நடிகர் விஷால் நடித்த மதகஜராஜா போல் வராமல் இருந்தால் கூட ஆச்சரியமில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

செய்திகள், திரையுலகம்

இயக்குனர் பாக்யராஜை மிதித்த மிஷ்கின்!…

சென்னை:-இயக்குனர் மிஷ்கின் எங்க போனாலும் பிரச்சனையோடு தான் வருவார் போல. அந்த வகையில் சமீபத்தில் ’தரணி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்றவர் பெரிய பிரச்சனையை இழுத்து வந்துள்ளார். மேடையில் அமர்ந்திருந்த மிஷ்கின் தன் அருகில் திரைக்கதை ஜாம்பவான் பாக்யராஜ் இருப்பதை பார்த்தும் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். அது கூட பரவாயில்லை அவர் மேல் கால் படும் அளவிற்கு உட்கார, மேடைக்கு கீழே இருந்தவர்களையே இந்த செயல் கோபப்படுத்தியது.

செய்திகள், திரையுலகம்

தினமும் கற்பழிக்கப்பட்டேன்: பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்!…

ஹாலிவுட்:-சமீபத்தில் வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல பாப் பாடகியும், நடிகையுமான லேடி காகா கூறுகையில், என் 19ம் வயது முதல் என்னை விட 20 வயது மூத்தவரினால், தினமும் பாலியல் வன்முறைக்கு ஆளாகினேன் என்றும் அன்று நடந்ததை விட நான்கைந்து வருடங்கள் கழித்துதான் அதன் பாதிப்பு அதிகமாக எனக்கு இருந்தது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இத்தனை வருடம் படைப்புத்திறன் மிகுந்த வேலைகளை செய்த நான், இந்த சம்பவம் மூலமாக அடையாளப்படுத்தப்படுவதை விரும்பவில்லை என கூறி இந்த கொடூர செயலை செய்த நபரை பற்றி கூற அவர் மறுத்துள்ளார்.

செய்திகள், திரையுலகம்

சிம்ஹாவை பார்க்கும் போது என்னை பார்ப்பது போல் உள்ளது – ரஜினி!…

சென்னை:-தமிழ் சினிமாவின் புதிய முயற்சியாக இந்த வருடம் வெளிவந்த திரைப்படம் ‘ஜிகர்தண்டா’. இப்படத்தை ரிலிஸ் செய்வதற்கு கார்த்திக் சுப்புராஜ் பட்ட கஷ்டம் அவருக்கு மட்டுமே தெரியும். இந்நிலையில் சமீபத்தில் இவர் ‘சூப்பர் ஸ்டார்’ அவர்களை லிங்கா ஷுட்டிங் ஸ்பாட்டில் சந்தித்துள்ளார். அவருக்கு ஜிகர்தண்டா மிகவும் பிடித்ததாக கூறியுள்ளார். குறிப்பாக சிம்ஹாவின் நடிப்பு தன் பரட்டை கேரக்ட்ரை நியாபக படுத்தியதாக கூறினாராம். இதை கார்த்திக் சுப்புராஜ் சந்தோஷமாக தன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

செய்திகள், திரையுலகம்

மீண்டும் விஷ்ணுவர்தனுடன் இணையும் நடிகர் அஜித்!…

சென்னை:-நடிகர் அஜித்-விஷ்ணுவர்தன் கூட்டணியில் வெளிவந்த பில்லா, ஆரம்பம் சூப்பர் ஹிட் ஆனது. அதிலும் பில்லா நடிகர் அஜித்தின் கேரியரிலேயே பெரும் மாற்றத்தை கொண்டு வந்த படம். இந்த கூட்டணி மீண்டும் இணைந்தால் எப்படி இருக்கும். ஆமாம், நடிகர் அஜித் மீண்டும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை சிறுத்தை சிவா அடுத்து அஜித்தை வைத்து இயக்கும் படம் முடித்த கையோடு ஆரம்பிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

செய்திகள், தொழில்நுட்பம்

அனைவரும் காதல் பொக்கிஷங்களை நிலவுக்கு அனுப்பலாம்: தபால் சேவை தொடக்கம்!…

நியூயார்க்:-அமெரிக்க நிறுவனமான ஆஸ்ட்ரோபோடிக் நிலவுக்கு தபால்களை அனுப்பும் ’மூன் மெயில்’ என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பட்டமளிப்பு, திருமணம் மற்றும் பிறந்த நாள் என்று அன்புக்குரியவர்களுடனான நமது நினைவுகளை என்றும் பல நூற்றாண்டுகள் நிலவில் அழியாது காக்க முடியும் என்று நம்பிக்கையை இந்த நிறுவனத்தின் மூன் மெயில் சேவை நமக்கு அளிக்கிறது. உலகின் எந்த மூலையிலுள்ள மக்களும் ஆஸ்ட்ரோபோடிக்கின் நிலவில் தரையிறங்க இருக்கும் விண்கலம் மூலம் தங்கள் நினைவு சின்னங்களை அனுப்பலாம் என அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜான் தோர்ன்டன் தெரிவித்தார். இதுகுறித்து அந்நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்ட தகவலின் படி, தற்போது சிறிய அளவிலான நினைவு சின்னங்களை தன் முதல் நிலவுப் பயணத்திற்காக சேகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும், ’மூன் கேப்சூல்’ எனப்படும் நிலவில் நமது பொருளை பாதுகாக்க பெட்டகம் ஒன்று தரப்படும் எனவும் தகவல் வெளியிட்டுள்ளது. நாம் அனுப்ப நினைக்கும் பொருளின் எடைக்கேற்ப 460 டாலர் முதல் 26000 டாலர் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்கலம் தரையிறங்கிய உடன் நம் நினைவுச்சின்னத்தின் புகைப்படமும், வீடியோவும் நமக்கு அனுப்பி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள்

ஒட்டிப்பிறந்த குழந்தைகளை ஆபரேஷன் மூலம் பிரிக்க முடிவு: பிரார்த்தனை செய்ய பேஸ்புக்கில் வேண்டுகோள்!…

புளோரிடா:-அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் வசிக்கும் மைக்கேல் பிரான்ட்லி-பிரயண்ட் மிராபல் தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் கேஜ் என்ற அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் மீண்டும் கருவுற்ற மிராபல் கடந்த வெள்ளியன்று கார்டர் மற்றும் கார்னர் என்று ஒட்டிப்பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். அடுத்த மாதம் பிறக்கவேண்டிய இக்குழந்தைகள் ஒரு மாதம் முன்னதாகவே பிறந்துள்ளன. இரு ஆண் குழந்தைகளின் முகமும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு உள்ளது. அவர்களது முகம் தனித்தனியே உள்ளபோதும், அடிவயிறு இருவருக்கும் ஒன்றாக இணைந்துள்ளது. அதே சமயம் இடுப்புக்கு கீழே இருவரும் தனித்தனி உடல் உறுப்புகளை கொண்டுள்ளனர். அவர்களது உடலை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள், கல்லீரலை தவிர அனைத்து பாகங்களும் தனித்தனியே இருப்பதால் அறுவை சிகிச்சை செய்து குழந்தைகளை தனித்தனியே பிரிக்க முடிவு செய்துள்ளனர். எனினும் இவர்களை பிரிக்கும்போது, ஐந்து முதல் 25 சதவிகிதிம் தான் இருவரும் பிழைக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனால் தங்கள் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சையின்போது எவ்வித ஆபத்தும் நேராமல் இருக்க பிரார்த்தனை செய்யுமாறு பேஸ்புக் மூலம் பெற்றோர் வேண்டுகோள் வைத்துள்ளனர். நாமும் குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்வோம்.

செய்திகள், திரையுலகம்

பாலிவுட்டிலும் வருகிறது ‘விஜய் 58’ திரைப்படம்!…

சென்னை:-நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ரசிகர்களுக்கு செம்ம கலர்புல் விருந்தாக இருக்கும் என இயக்குனர் கூறியிருந்தார். இந்நிலையில் இப்படத்தில் பணிபுரியும் அத்தனை டெக்னிஷியன்களும் பாலிவுட்டை சார்ந்தவர்கள். அதனால் இதுநாள் வரை தென்னிந்தியாவில் மட்டும் நடிகர் விஜய்யின் கொடி பறந்து வந்தது. இந்த முறை பாலிவுட்டில் கால் பதிக்கலாம் என்று இப்படத்தை ஹிந்தியில் டப் செய்து ரிலிஸ் செய்ய இருக்கிறார்களாம்.

செய்திகள், திரையுலகம்

நல்லது செய்த நடிகை ஹன்சிகாவிற்கு துரோகம் செய்த சிவகார்த்திகேயன்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர்களும் விரும்பும் நடிகை ஹன்சிகா. இவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று பல இளம் ஹீரோக்கள் வெயிட்டிங். யாருக்கும் கிடைக்காத அந்த அரிய வாய்ப்பு நடித்த சில படங்களில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்தது. அந்த நேரத்தில் சிவகார்த்திகேயன் -ஹன்சிகா நட்பு வலுவானது. இதனால் அவருக்காக ஒரு கதை ரெடி செய்ய சொல்லி சுந்தர்.சியிடம் கேட்டுள்ளார் ஹன்சிகா. அவரும் ஓகே சொல்லி, பாதி கதை முடிய, தற்போது சிவகார்த்திகேயன் எனக்கு ஹன்சிகா வேண்டாம், நயன்தாரா கமிட் செய்யுங்கள் என்று கூறிவிட்டாராம்.

Scroll to Top