சென்னை:-நீர்க்குமிழி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலசந்தர். வித்தியாசமான படங்களை இயக்கி, தமிழ் சினிமாவின் இயக்குநர் சிகரமாக திகழ்ந்தார். இயக்குநராக மட்டுமல்லாது கவிதாலயா எனும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களும் தயாரித்தார். வௌ்ளித்திரை தவிர்த்து சின்னத்திரையிலும் நிறைய சிரீயல்களை எடுத்துள்ளார். இன்றைக்கு தமிழ்சினிமாவில் இருக்கும் பல பிரபலங்களை அறிமுகம் செய்த பெருமை இவருக்கு உண்டு.
தற்போது 84வயதாகும் பாலசந்தருக்கு இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி