சிட்னி:-ஆஸ்திரேலியா, சிட்னி நகரின் மத்தியில் உள்ள மாட்டின் பிளேசில் செயல்பட்டு வரும் லிண்ட் சாக்லேட் கஃபேவில் புகுந்த தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் பொதுமக்கள் பலரை பிணைக்கைதியாக பிடித்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து ஒரு பெண் உள்பட ஐந்து பேர் உயிர் தப்பி வந்துள்ளனர். எனினும் தீவிரவாதிகளின் பிடியில் எவ்வளவு பொதுமக்கள் உள்ளனர் என்று இது வரை உறுதிசெய்யப்படவில்லை. அதே சமயம் முன்னதாக 30 முதல் 40 வரையிலான பொதுமக்கள் தீவிரவாதிகளின் பிடியில் உள்ளதாக வந்த பத்திரிகை செய்தி தவறானது என்று போலீசார் தெரிவித்தனர். தீவிரவாதிகளின் இந்த செயல், மிகவும் வருத்தமளிப்பதாக அந்நாட்டு பிரதமர் டோனி அப்பாட் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி