இந்த டெஸ்டின்போது ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் முதுகு வலியால் அவதிப்பட்டார். அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினார். அவரது எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாகவே இருக்கிறது. கிளார்க் காயத்தால் விலகியதால் ஆஸ்திரேலிய அணிக்கு பிராட் ஹாடின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கிளார்க்கும் தனது ஆதரவை அவருக்கு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக ஸ்டீவன் சுமித் நியமிக்கப்பட்டுள்ளார். எஞ்சிய 3 டெஸ்ட்டுக்கு அவரை கேப்டனாக தேர்வு செய்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்ட 45–வது வீரர் சுமித் ஆவார். அவருக்கு 25 வயது 195 நாட்கள்தான் ஆகிறது. இதன்மூலம் இளம் வயதில் கேப்டன் பொறுப்பை ஏற்ற 2–வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றார். 1979–ம் ஆண்டு சிம்ஹியூக்ஸ் 25 வயது 57 நாட்களில் கேப்டன் பொறுப்பை ஏற்றார். சுமித் முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 162 ரன்னும் (அவுட் இல்லை), 2–வது இன்னிங்சில் 52 ரன்னும் (அவுட் இல்லை) எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி